Monday 1 October 2018

மாரியம்மன் கோவில்

அருள்மிகு மாரியம்மன் கோவில் திருப்பணி நன்கொடையாளர்கள் முதல் பட்டியல்

Thursday 27 August 2015

பத்தாம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வு, அரசு மேல்நிலை பள்ளி, பின்னையூர்

மொழிப்போர் தியாகி உ.வீரராசு காலிங்கராயர் மற்றும் பொறியாளர் வீ. இளங்கோவன் நினைவாக பத்தாம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வு, அரசு மேல்நிலை பள்ளி, பின்னையூர்.

100 க்கு 100 மதிப்பெண் எடுத்த 19 மாணவர்களுக்கு அக்னி சிறகுகள் புத்தகமும்,
முதல் மதிப்பெண் எடுத்த 3 மாணவர்களுக்கு தலா 2000 ரூபாயும், 
இரண்டாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1500 ரூபாயும்,
மூன்றாம் மதிப்பெண் எடுத்த 2 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாயும்,
சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் வகையில் இரு கேடயமும் (10 மற்றும் 12 வகுப்பு) வழங்கப்பட்டது.


Friday 24 May 2013

வாழ்த்துக்கள்!...

 
 
முதல் ஆண்டில் முத்தாய்ப்பாக நமது வட்டத்தில் மூன்றாம் இடம்
பெற வழி வகுத்து வெற்றிக்கு வித்திட்ட எம் ஆசிரிய பெருமக்களுக்கு பின்னையூர் நாட்டின் சார்பாக நன்றி!.... நன்றி!... மாணவசெல்வங்களுக்கு வாழ்த்துக்கள்!... 
 
 
 
 

 

Sunday 10 June 2012

பின்னையூர் மக்கள் தொகை.


பின்னையூர் வருவாய் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ராஜாமட கால்வாயின் கிழக்கு பக்கம் வசிப்போர் பின்னையூர் கிழக்கு என்றும்,
ராஜாமட கால்வாயின் மேற்கு பக்கம் வசிப்போர் பின்னையூர் மேற்கு என்றும் அழைக்கபடுகிறது.
பின்வரும் கணக்கு 2000 ஆண்டின் கணக்கெடுப்பு

பின்னையூர் கிழக்கு
மொத்த மக்கள் தொகை : 2203
ஆண் - 1083
பெண் - 1023
மொத்த வீடுகள் : 492


பின்னையூர்  மேற்கு  
மொத்த மக்கள் தொகை : 2200
ஆண் - 1200
பெண் - 1000
மொத்த வீடுகள் : 500

பின்னையூர் அரசு தொடக்கபள்ளி ஆண்டு விழா

பின்னையூர் அரசு தொடக்கபள்ளி ஆண்டு விழா - நன்கொடை நல்கியோர் மற்றும் இந்த ஆண்டுக்கான திட்டமிடல்


Monday 27 February 2012

தற்போதைய நிகழ்வுகள்





சிறப்பான முறையில் இந்த ஆண்டு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடத்தி முடித்த எம் தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரிய பெருந்தகைகளுக்கும், மாணவ செல்வங்களுக்கும், எம் ஊரின் பொதுமக்கள் சார்பாக நன்றிகளும், வாழ்த்துகளும் தெரிவித்துகொள்கிறோம்.



சிறப்பான முறையில் இந்த ஆண்டு கிரிகெட் தொடர் போட்டி நடத்தி முடித்த எம் இளைஞர் அணிக்கு வாழ்த்துக்கள்.

Saturday 25 February 2012

உறவுகளின் ஆக்கங்கள் மற்றும் எண்ணங்கள்

இந்த வலை   தளத்தை பார்ப்பவர்களின்  மனதில் கண்டிப்பாக ஏற்பட கூடிய எண்ணம் எதற்காக ஒரு கிராமத்திருக்கு வலை தளம் என்று. அதற்க்கான சிறு விளக்கமாக எங்கள் எண்ணங்களில் எழுந்தவை உங்களின் பார்வைக்கு கீழே தரப்படுகிறது.

நகர வாழ்க்கை பழகி விட்ட நமக்கு இந்த வலைத்தளம் பத்தோடு பதினொன்றாய், மேலும் ஒரு வலை தளமாய் தான் தெரியும் .
 நாம் வகிக்கும் பதவியை காரணம் காட்டி நாகரிகம் என்ற போர்வையில் சக ஊழியர்களிடமே மனம் விட்டு பேச முடியாத நிலை. இங்கே நகரத்தில் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று  தெரியாத ஒரு வாழ்க்கை . அப்படியே ஒருவரை ஒருவர்  பார்த்து கொண்டாலும் ஹலோ, ஹாய் , சார் , மேடம் இப்படி உயிர் இல்லாத வார்த்தைகள் மட்டுமே வெறும் சம்பிரதாயத்துக்க பரிமாறி கொள்கிறோம் . இதே நிலைமை அலுவலகத்திலும்.

ஆனால் எங்கள் கிராமத்தில் நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது பேர் உறவுகளை  மட்டுமே சொல்லி அழைப்பர் . அண்ணா, மாமா ,  மச்சான் , தம்பி, சித்தப்பா, அய்யா, தாத்தா, ஆயா என்று நம்மை கூப்பிடும் அந்த நிமிடம் நம் மனதில் உள்ள அனைத்து பாரங்களும் இறக்கி வைக்க பட்டது போன்ற உணர்வு. எத்தனை உறவுகள் என்னவொரு அற்புதமான மனநிறைவு.

 எங்கள் கிராமத்து பெண்கள்;  தன்னை விட சிறியவர்கள் என்றாலும், எங்களை இன்னார் வீட்டு தம்பி என்று உறவுகளை மட்டுமே சொல்லி அழைப்பர்.
கள்ளம் கபடம் இல்லாத அவர்களின் விசாரிப்பு எந்த வார்த்தைகளையும் கொண்டு  விவரிக்க முடியாதது .
எங்களின் சில  குடும்பங்களில் பகை இருந்தாலும் இப்பொழுது உள்ள தலைமுறைகள் மிக ஒற்றுமையாய் தான்   இருக்கிறார்கள் .
எங்கள் முன்னோர்களும்  எங்களின் ஒற்றுமையை பார்த்து அவர்களும் பகையை மறப்பார்கள் என நம்புகிறோம்.


Friday 24 February 2012

பின்னையூர்

இயற்கை எழில் கொஞ்சும் பின்னையூர் கிராமம், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து தென்புறத்தில்
30 கிலோ மீட்டர் தொலைவிலும் ஒரத்தநாடுலிருந்து தென்மேற்கு திசையில் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் நீளமும் 5 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பசுமையான கிராமம். விவசாயம் முதல் தொழிலாக கொண்ட கிராமம். ஊருக்கு நடுவில் இழையும் ராஜாமடம் கால்வாயின் உதவியால் பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு என இரண்டு வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு நடுவில் அரசு தொடக்க பள்ளி, மேனிலை பள்ளி,கூட்டுறவு வங்கி, அரசு நெல் கொள்முதல் நிலையம், கால்நடை மருத்துவமனை மற்றும் தொலைபேசி இணைப்பகம் ஆகியன அமைந்துள்ளன.அரசு மருத்துவமனையும், மின்சார கிளை அலுவலகமும், தனியார் பள்ளியும், அரசு சிறப்பு தொடக்க பள்ளி, அஞ்சல் நிலையம் போன்றவை ஊரின் மற்ற இடங்களில் அமைந்துள்ளது.
சிவன், பெருமாள், மாரியம்மன், அய்யனார், இடும்பன், பிடாரி, விநாயகர் மற்றும் முருகன் என அனைத்து கோவில்களும் ஒரே இடத்தில் அமைய பெற்று கோவில் தெரு என அழைக்கப்படுகிறது.
கீழக்கோட்டை, மேலதெரு, காலிங்கராயர் தெரு, சிறுசாளுவர் தெரு, தெற்கு தெரு, கோவில் தெரு, செங்குளம் தெரு, கணக்கன் தெரு என்று எங்கள் ஊர் தெரு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
கள்ளர், வெள்ளாளர் (பிள்ளை) மற்றும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மக்கள் இனவேறுபாடின்றி வசிக்கின்றோம் நான்கு நாடுகளில்
இளைய நாடாக பின்னையூர் நாடு விளங்குகின்றது, மற்ற நாடுகள் காசவள நாடு, கீழ்வேங்கை நாடு, கோனூர் நாடு. நன்கு நாடுகளின் சமரச சன்மார்க்க சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு தைபூசத்துக்கும் வடலூர் வள்ளலார் சன்னதியில் அன்னதானம் செய்யப்பட்டு, வழிப்பாடு செய்யபடுகிறது.
ஒரு மாத காலம் நடைபெறும் திருவிழா எங்கள் ஊரின் சிறப்பாக போற்றப்படுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 32 அடி உயரம் கொண்ட இரண்டு (அய்யனார், மாரியம்மன்) தேர்களை இளைஞர்கள் தங்களது தோள்களில் தூக்கி ஊரை வலம் வருவது, சுற்று வட்டாரத்தில் இன்றும் வியப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு.
எங்கள் மண்ணின் மைந்தர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பு பெற்று எங்கள் ஊருக்கு பெருமை தேடி தருகின்றனர்.

Wednesday 22 February 2012

எங்கள் ஊரின் திருவிழா

எங்கள் ஊரின்  திருவிழா மிகவும் சிறப்பானதாக போற்றபடுகிறது. அதனை பற்றி  எமக்கு தெரிந்த சில தகவல்கள்.
இந்த திருவிழா ஒரு மாத காலம் நடைபெறும். முதல் வாரம் ஒவ்வொரு
கரையை* சேர்ந்தவர்களின் சார்பாக இன்னிசை நிகழ்ச்சி
நடைபெறும்.
இரண்டாவது வாரம் முளைப்பாரி** திருவிழா நடைபெறும்.   மூன்றாவது வாரம் ஆதிதிராவிடர்களின் சார்பாக திருவிழா நடைபெறும். இறுதி வாரம்
இந்த திருவிழாவின் உச்சமாக போற்றபடுவது, தேரை தோளில்
தூக்கியபடி ஊரை வலம் வருதல்.  இதில் திங்கள் கிழமையும்
புதன் கிழமையும்  சிறிய அளவிலான தேரை  தூக்கியபடி இளைஞர்கள்
ஊரை   வலம் வருவர்.  (இது இளைஞர்களின் தோளுக்கும் கால்களுக்கும் ஒரு பயிற்சிக்காக இருக்கலாம்) இறுதி நாளான வெள்ளி கிழமை, 32 அடி
உயரமுள்ள இரண்டு தேர்களை (அய்யனார் மற்றும் மாரியம்மன்)
தூக்கியபடி இளைஞர்கள்  ஊரை வலம் வருவர். ஊரில் தேர் பாதை
என்று ஒரு வழி உள்ளது அந்த பாதையில் தான்  தேர் பயணிக்கும். அந்த பாதையில் எவரும் மரம் போன்றவற்றை வளர்க்க மாற்றார்கள். அதேபோல
கரை   வாரியாக தான் தேர் செல்லும் இதனால் சற்று அதிகமாக சுற்ற வேண்டி இருந்தாலும் அப்படி தான் தேர் செல்லும். இதில் முக்கியமான நிகழ்வு, கோவிலில் தேர் தூக்கியதில் இருந்து ஊரை
சுற்றி மீண்டும்  கோவில் வரும் வரை தேர் இளைஞர்களின் தோளில் தான் இருக்கும்.  இந்த தேரை தூக்குவது தெரு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
சுமாராக 5.5 மணி நேரம் தேரை தூக்கியபடி ஊரை வலம் வரவேண்டி
இருக்கும். வருத்தமான செய்தியாக இந்த திருவிழா கடந்த 14
வருடங்களாக நடைபெறவில்லை.

*கரை - கள்ளர் இனத்தின் உட்பிரிவுகளில் ஏழு பிரிவினர் எங்கள் ஊரில் வசிக்கின்றனர் இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கரை என அழைக்கப்படுவர். இதில் முதல் கரையாக வெள்ளாளர்
இனத்தினர் மதிக்கப்படுகின்றனர். ஊருக்கு நாட்டாமையாக ஒருவரும், ஒவ்வொரு கரைக்கும் ஒரு நாட்டாமையும், பஞ்சாயத்துகளும்  இருக்கின்றனர்.


**முளைப்பாரி    - நவதானியங்களை விதைத்து ஐந்தாவது நாளில்
பார்க்கும் பொது   இளம்பச்சை நிறத்தில் வளர்ந்து நிற்கும் அதனை  நடுவில்
வைத்து  பதினெட்டு பொறியல் செய்து  அதன் மேல் தேங்காய் பூ
துருவி  போட்டு ஒரு பெரிய கூடையில் வைத்து ஒவ்வொருவரும்  தெரு வாரியாக  பிடாரி அம்மன் கோவிலுக்கு  தூக்கி செல்வர்கள் இது காண கண்கொள்ள கட்சியாக இருக்கும்.

Tuesday 21 February 2012

தலைவர்கள் கருத்து


"இளைஞர்களை களத்துக்கு அனுப்புவதிலும், களப்பணி ஆற்றுவதிலும்,
கழகத்தை முன்னேற்றுவதிலும் இது பின்னையூர் அல்ல முன்னையூர்"

 சக்திவேல்  - செல்வராணி திருமண விழாவில் கலைஞர் மு. கருணாநிதி

உள்ளாட்சியில் பின்னையூர்

ஊராட்சி மன்ற தலைவர்கள்

நா.கலியமூர்த்தி அவர்கள்
ஆசைதம்பி அவர்கள்
தங்கப்பா அவர்கள்
தேவேந்திரி முத்துசாமி அவர்கள்
தர்மலிங்கம் அவர்கள்
அண்ணா. ராமசந்திரன் அவர்கள்


ஒன்றிய குழு உறுப்பினர்கள்

கீதா லஷ்மணன் அவர்கள்
சுஜா அன்புசெழியன் அவர்கள்
நல்லியகோடன் அவர்கள்
நடேசன் அவர்கள்

மாவட்ட ஊராச்சி குழு உறுப்பினர்

கோவிந்தராசு அவர்கள்

Monday 20 February 2012

மண்ணின் மைந்தர்கள்

(இது முழுமையான தொகுப்பு அல்ல, தகவல்கள் திரட்டபடுகின்றன.)

அரசியல்:

பெயர் - கட்சி - வகித்த பொறுப்பு

சாமிநாதன் - அதிமுக - தஞ்சை மாவட்ட செயலர் (எங்கள் நினைவுகளில் வாழ்பவர்)
எம். ராமச்சந்திரன் - திமுக-  சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் - திருவோணம் தொகுதி
கோவிந்தராசு - திமுக - மாவட்ட மாணவரணி அமைப்பாளர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர்
சக்திவேல் - திமுக - பொது குழு உறுப்பினர்
நல்லியகோடன் - மதிமுக - மாவட்ட மாணவரணி துணை செயலாளர்

தியாகி
மொழிபோர்  தியாகி உ. வீரராசு காலிங்கராயர் (எங்கள் நினைவுகளில் வாழ்பவர்)

இந்திய ஆட்சி பணி (IAS)
அ.பன்னீர் செல்வம்


மருத்துவம்
மழவன் - அரசு பொது மருத்துவமனை - சென்னை
மா. திருந்தையன்  - அரசு மருத்துவர், ஒரத்தநாடு
இரா. திருந்தையன் - மருத்துவர், சென்னை
இரா. அபிராமி - பல் மருத்துவர், தஞ்சாவூர்
மா. பொன்னி - மருத்துவர், ஆஸ்திரேலியா.
தி.புஷ்பா - பல் மருத்துவர், தஞ்சாவூர்
தி. சரண்யா, தஞ்சாவூர்
தி. விஷ்ணு , தஞ்சாவூர்



கால்நடை மருத்துவர்கள் -
கீதா கதிரேசன்
நளினி பழனிவேல்

வேளாண்மை துறை நிபுணர்கள்
வீ. கலியமூர்த்தி - இணை இயக்குனர், தஞ்சாவூர் (ஓய்வு)
செல்லத்துரை (எங்கள் நினைவுகளில் வாழ்பவர்)
மு. சண்முகநாதன்,  துபாய்
எஸ். மணிமாறன், தஞ்சாவூர் 


நீதி அரசர்
ச.சிற்றரசு - சென்னை


வழக்கறிஞர்கள் 
பன்னீர் செல்வம் - உயர் நீதி மன்றம், சென்னை
மா.பாலையன் - தஞ்சாவூர்
சாமிநாதன் -தஞ்சாவூர்
விஸ்வநாதன் - தஞ்சாவூர்
சின்னதுரை - ஒரத்தநாடு


வங்கி பணியில் -
சச்சிதானந்தம் (ஓய்வு)
அ.திருச்செல்வம்
மா.ஜெயராமன்
சௌ.அகிலன்
செந்தில்குமார்



தொழிலதிபர்
இரா.பன்னீர் செல்வம் - அப்பு சீவல் - தஞ்சாவூர்
நீ.ஸ்டாலின் - ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் - சிங்கப்பூர்
வீ.கதிரேசன் -  vmk ரியல் எஸ்டேட், தஞ்சாவூர்   
சற்குணம் - வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனம், திருப்பூர். (சிங்கப்பூரில் பணிபுரிகின்றார்)
பா.அருண் - ஸ்கை நெட் இணைய தளம் - ஒரத்தநாடு, உலூர்
எஸ்.மணிமாறன் - உரம், விதை விற்பனை நிலையம், ஒரத்தநாடு
எஸ்.செந்தில்  -  உரம், விதை விற்பனை நிலையம், வெட்டிக்காடு



P.hd. முனைவர்
தங்கராசு - GHSU Cancer center,Augusta, GA 30912  
அர்ச்சுனன், பனிமலர் கல்லூரி, சென்னை
மணிவண்ணன் கணேசன் - MCC சென்னை
பா.சீனிவாசன் - அழகப்பா பல்கலைகழகம்.
ப.பிரேமாவதி, பாரதிதாசன் பல்கலைகழகம்
சித்ரா - பாரதிதாசன் பல்கலைகழகம், திருச்சி


அரசு காப்பாளர்
பக்கிரிசாமி - சிவகங்கை அரசு காப்பகம்


காவல் துறை
ச.அசோகன் - ஆய்வாளர் - சென்னை
சிவஞானம் - ஆய்வாளர் - வடுவூர்
ஆர்.கர்ணன்
இரா. சுந்தரபாண்டியன்
பி.ஆனந்தன்
ரவி




கல்லூரி விரிவுரையாளர்கள் -
எம். முத்துசாமி - நந்தனம் கல்லூரி, சென்னை.  (ஓய்வு)
எம்.பன்னீர்செல்வம் - சென்னை (எங்கள் நினைவுகளில் வாழ்பவர்)
அர்ச்சுனன், பனிமலர் கல்லூரி, சென்னை
மணிவண்ணன் கணேசன் -  MCC சென்னை  
பழனிவேல் - அண்ணா பல்கலைக்கழகம்
அர.சத்யா - மருதுபாண்டியர் கல்லூரி, தஞ்சாவூர்


ஆசிரியர்கள்

கதிரேசன்
பழனிசாமி
மோகன் - முதல்வர் - லண்டன் கிருஷ்ணமூர்த்தி பள்ளி, ஒரத்தநாடு
விஜயா திருந்தையன்
மேனகா
வேம்பையன்
கிருஷ்ணவேணி
ரெங்கசாமி
இலக்குமி கல்யாணசுந்தரம்
வளர்மதி ரவி
மயில்ராணி


பொறியாளர்கள்

எலெக்ரிக்கல்
மாரிமுத்து  - ஒரத்தநாடு (ஓய்வு)
வீ. இளங்கோவன் -சிங்கப்பூர்  (எங்கள் நினைவுகளில் வாழ்பவர்)
நவநீத கிருஷ்ணன் அய்யாசாமி  - சவ்தி
மலர்வண்ணன் - சிங்கப்பூர்
மோகனா இளவழுதி - சிங்கப்பூர்
இளையபாரதி செல்வராசு - அபுதாபி
இன்பரசன் சூர்யமூர்த்தி - சிங்கப்பூர்
செந்தமிழ்வாணன் செல்வராசு - திருச்சி
ராஜாராம்

மெக்கானிக்கல்
அரங்கதுரை கணேசன் - சென்னை
விவேக் கோவிந்தராசு - சென்னை
ஜெயகுமார் செல்வராசு - சென்னை
ஆர்.சபரிநாதன் - சென்னை
எஸ்.தமிழ்வேந்தன் - சென்னை
பழனிவேல் கலியமூர்த்தி - சென்னை
மதிவாணன் செல்வராசு - திருச்சி

சிவில்
ரெங்கராஜன் -சிங்கப்பூர்
ஆர்.செங்குட்டுவன் - சென்னை

கெமிக்கல்
வை. ராஜராஜன் - சிங்கப்பூர்
கதிர்மாறன்  - சிங்கப்பூர்


கணினி பொறியாளர்கள்

இளங்கோவன் சக்திவேல்  - சென்னை
அஜய் - அமெரிக்கா
ராஜமாணிக்கம் - சிங்கப்பூர்
ஜெயராணி ஸ்டாலின் - சென்னை 
சுமதி ரெங்கராஜன் - சிங்கப்பூர்
லெனின் சதாசிவம் - சென்னை
இளவழுதி வீரராசு - சென்னை
பராந்தகன் ராசு - சென்னை
இந்த்ரஜித் முத்துசாமி - அமெரிக்கா
சுரேஷ் - சிங்கப்பூர்
வித்யா  மலர்வண்ணன் - சிங்கப்பூர்
நிவேதா @ மருதசங்கீதா - சென்னை
அமலா பழனிவேல் - சென்னை 
பூமிநாதன் சண்முகம் - அமெரிக்கா
பிரசாத் திருச்செல்வம்  - அமெரிக்கா
பிரபு பிச்சை - சென்னை
கண்ணன் பன்னீர்  செல்வம் - அமெரிக்கா
மயில்ராஜன் - சென்னை
விஜயராஜா மதிராசு - சென்னை
ப.விஜயராணி மதிராசு - சென்னை
கரிகாலன் ராசு - சென்னை
சக்திவேல் கலியமூர்த்தி - சென்னை
ராமசந்திரன் சாமிநாதன் - சென்னை
பிரபாகரன் கணேசன் - மும்பை
எழிலரசி வீரராசு - சென்னை
ராஜா ராமையன் - தஞ்சாவூர்

நாதஸ்வரம் வித்வான்
பின்னை மாநகர் ஹரிஹரன் - தட்சிணாமூர்த்தி சகோதரர்கள்

வில்லுப்பாட்டு
மதியழகன் பெருமாள்


அஞ்சல் துறை
கவிஞானம்

விளையாட்டு

கபடி - தேசிய அளவில் சிறார்களுக்கான சிறந்த விளையாட்டு வீரர்
பி.அசோகன்

பளு தூக்குதல் - இந்தியாவில் பல்கலைகழக அளவில் 5 வது இடம்
கோ.சுருளிராஜன்

கபடி - குழு
தமிழீழ விடுதலை விரும்பிகள்

கிரிகெட் - குழு
பின்னை லவ்லி பாய்ஸ்
தமிழீழ விடுதலை விரும்பிகள்

பள்ளி மாணாக்கர்களை சிறப்பிக்கும் சிலர்

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எம் பள்ளியின் முதல் மாணவனுக்கு பரிசளித்து வரும் எங்கள் மண்ணின் மைந்தர் திரு.கருணாநிதி அவர்களுக்கு இந்த வலைதளத்தின் மூலம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மொழிப்போர் தியாகி உ.வீரராசு காலிங்கராயர் மற்றும் பொறியாளர் வீ.இளங்கோவன் நினைவாக எம் பள்ளியின் பத்தாம் வகுப்பின் முதல் மூன்று மாணவர்களுக்கும், மேலும் சில சிறப்பு பரிகளும்
திரு. வீ.அன்புச்செழியன் & குடும்பத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் மகிழ்வுடன் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.


கடந்த 2010 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளித்த மேலும் சிலர்
மோகனா இளவழுதி
பிரசாத் திருச்செல்வம்
கண்ணன் பன்னிர்செல்வம்        
பிரபு பிச்சை
விஜயராஜா மதிராசு
சக்திவேல் கலியமூர்த்தி

அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.

 3rd மாணவன் INR 1500                           இரண்டாம் மாணவன் INR 1750
                                                                                                  முதல் மாணவன் INR 2000

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்



கடந்த  ஆண்டின் பொங்கல் விழாவில் சிறப்பு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  பரிசளிக்கும் நிகழ்ச்சி