Friday 24 February 2012

பின்னையூர்

இயற்கை எழில் கொஞ்சும் பின்னையூர் கிராமம், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து தென்புறத்தில்
30 கிலோ மீட்டர் தொலைவிலும் ஒரத்தநாடுலிருந்து தென்மேற்கு திசையில் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் நீளமும் 5 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பசுமையான கிராமம். விவசாயம் முதல் தொழிலாக கொண்ட கிராமம். ஊருக்கு நடுவில் இழையும் ராஜாமடம் கால்வாயின் உதவியால் பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு என இரண்டு வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு நடுவில் அரசு தொடக்க பள்ளி, மேனிலை பள்ளி,கூட்டுறவு வங்கி, அரசு நெல் கொள்முதல் நிலையம், கால்நடை மருத்துவமனை மற்றும் தொலைபேசி இணைப்பகம் ஆகியன அமைந்துள்ளன.அரசு மருத்துவமனையும், மின்சார கிளை அலுவலகமும், தனியார் பள்ளியும், அரசு சிறப்பு தொடக்க பள்ளி, அஞ்சல் நிலையம் போன்றவை ஊரின் மற்ற இடங்களில் அமைந்துள்ளது.
சிவன், பெருமாள், மாரியம்மன், அய்யனார், இடும்பன், பிடாரி, விநாயகர் மற்றும் முருகன் என அனைத்து கோவில்களும் ஒரே இடத்தில் அமைய பெற்று கோவில் தெரு என அழைக்கப்படுகிறது.
கீழக்கோட்டை, மேலதெரு, காலிங்கராயர் தெரு, சிறுசாளுவர் தெரு, தெற்கு தெரு, கோவில் தெரு, செங்குளம் தெரு, கணக்கன் தெரு என்று எங்கள் ஊர் தெரு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
கள்ளர், வெள்ளாளர் (பிள்ளை) மற்றும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மக்கள் இனவேறுபாடின்றி வசிக்கின்றோம் நான்கு நாடுகளில்
இளைய நாடாக பின்னையூர் நாடு விளங்குகின்றது, மற்ற நாடுகள் காசவள நாடு, கீழ்வேங்கை நாடு, கோனூர் நாடு. நன்கு நாடுகளின் சமரச சன்மார்க்க சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு தைபூசத்துக்கும் வடலூர் வள்ளலார் சன்னதியில் அன்னதானம் செய்யப்பட்டு, வழிப்பாடு செய்யபடுகிறது.
ஒரு மாத காலம் நடைபெறும் திருவிழா எங்கள் ஊரின் சிறப்பாக போற்றப்படுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 32 அடி உயரம் கொண்ட இரண்டு (அய்யனார், மாரியம்மன்) தேர்களை இளைஞர்கள் தங்களது தோள்களில் தூக்கி ஊரை வலம் வருவது, சுற்று வட்டாரத்தில் இன்றும் வியப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு.
எங்கள் மண்ணின் மைந்தர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பு பெற்று எங்கள் ஊருக்கு பெருமை தேடி தருகின்றனர்.

2 comments:

  1. ஊரைப்பற்றிய உங்களின் உற்று நோக்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete