Wednesday 22 February 2012

எங்கள் ஊரின் திருவிழா

எங்கள் ஊரின்  திருவிழா மிகவும் சிறப்பானதாக போற்றபடுகிறது. அதனை பற்றி  எமக்கு தெரிந்த சில தகவல்கள்.
இந்த திருவிழா ஒரு மாத காலம் நடைபெறும். முதல் வாரம் ஒவ்வொரு
கரையை* சேர்ந்தவர்களின் சார்பாக இன்னிசை நிகழ்ச்சி
நடைபெறும்.
இரண்டாவது வாரம் முளைப்பாரி** திருவிழா நடைபெறும்.   மூன்றாவது வாரம் ஆதிதிராவிடர்களின் சார்பாக திருவிழா நடைபெறும். இறுதி வாரம்
இந்த திருவிழாவின் உச்சமாக போற்றபடுவது, தேரை தோளில்
தூக்கியபடி ஊரை வலம் வருதல்.  இதில் திங்கள் கிழமையும்
புதன் கிழமையும்  சிறிய அளவிலான தேரை  தூக்கியபடி இளைஞர்கள்
ஊரை   வலம் வருவர்.  (இது இளைஞர்களின் தோளுக்கும் கால்களுக்கும் ஒரு பயிற்சிக்காக இருக்கலாம்) இறுதி நாளான வெள்ளி கிழமை, 32 அடி
உயரமுள்ள இரண்டு தேர்களை (அய்யனார் மற்றும் மாரியம்மன்)
தூக்கியபடி இளைஞர்கள்  ஊரை வலம் வருவர். ஊரில் தேர் பாதை
என்று ஒரு வழி உள்ளது அந்த பாதையில் தான்  தேர் பயணிக்கும். அந்த பாதையில் எவரும் மரம் போன்றவற்றை வளர்க்க மாற்றார்கள். அதேபோல
கரை   வாரியாக தான் தேர் செல்லும் இதனால் சற்று அதிகமாக சுற்ற வேண்டி இருந்தாலும் அப்படி தான் தேர் செல்லும். இதில் முக்கியமான நிகழ்வு, கோவிலில் தேர் தூக்கியதில் இருந்து ஊரை
சுற்றி மீண்டும்  கோவில் வரும் வரை தேர் இளைஞர்களின் தோளில் தான் இருக்கும்.  இந்த தேரை தூக்குவது தெரு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
சுமாராக 5.5 மணி நேரம் தேரை தூக்கியபடி ஊரை வலம் வரவேண்டி
இருக்கும். வருத்தமான செய்தியாக இந்த திருவிழா கடந்த 14
வருடங்களாக நடைபெறவில்லை.

*கரை - கள்ளர் இனத்தின் உட்பிரிவுகளில் ஏழு பிரிவினர் எங்கள் ஊரில் வசிக்கின்றனர் இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கரை என அழைக்கப்படுவர். இதில் முதல் கரையாக வெள்ளாளர்
இனத்தினர் மதிக்கப்படுகின்றனர். ஊருக்கு நாட்டாமையாக ஒருவரும், ஒவ்வொரு கரைக்கும் ஒரு நாட்டாமையும், பஞ்சாயத்துகளும்  இருக்கின்றனர்.


**முளைப்பாரி    - நவதானியங்களை விதைத்து ஐந்தாவது நாளில்
பார்க்கும் பொது   இளம்பச்சை நிறத்தில் வளர்ந்து நிற்கும் அதனை  நடுவில்
வைத்து  பதினெட்டு பொறியல் செய்து  அதன் மேல் தேங்காய் பூ
துருவி  போட்டு ஒரு பெரிய கூடையில் வைத்து ஒவ்வொருவரும்  தெரு வாரியாக  பிடாரி அம்மன் கோவிலுக்கு  தூக்கி செல்வர்கள் இது காண கண்கொள்ள கட்சியாக இருக்கும்.

No comments:

Post a Comment