Saturday 25 February 2012

உறவுகளின் ஆக்கங்கள் மற்றும் எண்ணங்கள்

இந்த வலை   தளத்தை பார்ப்பவர்களின்  மனதில் கண்டிப்பாக ஏற்பட கூடிய எண்ணம் எதற்காக ஒரு கிராமத்திருக்கு வலை தளம் என்று. அதற்க்கான சிறு விளக்கமாக எங்கள் எண்ணங்களில் எழுந்தவை உங்களின் பார்வைக்கு கீழே தரப்படுகிறது.

நகர வாழ்க்கை பழகி விட்ட நமக்கு இந்த வலைத்தளம் பத்தோடு பதினொன்றாய், மேலும் ஒரு வலை தளமாய் தான் தெரியும் .
 நாம் வகிக்கும் பதவியை காரணம் காட்டி நாகரிகம் என்ற போர்வையில் சக ஊழியர்களிடமே மனம் விட்டு பேச முடியாத நிலை. இங்கே நகரத்தில் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்கிறார்கள் என்று  தெரியாத ஒரு வாழ்க்கை . அப்படியே ஒருவரை ஒருவர்  பார்த்து கொண்டாலும் ஹலோ, ஹாய் , சார் , மேடம் இப்படி உயிர் இல்லாத வார்த்தைகள் மட்டுமே வெறும் சம்பிரதாயத்துக்க பரிமாறி கொள்கிறோம் . இதே நிலைமை அலுவலகத்திலும்.

ஆனால் எங்கள் கிராமத்தில் நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது பேர் உறவுகளை  மட்டுமே சொல்லி அழைப்பர் . அண்ணா, மாமா ,  மச்சான் , தம்பி, சித்தப்பா, அய்யா, தாத்தா, ஆயா என்று நம்மை கூப்பிடும் அந்த நிமிடம் நம் மனதில் உள்ள அனைத்து பாரங்களும் இறக்கி வைக்க பட்டது போன்ற உணர்வு. எத்தனை உறவுகள் என்னவொரு அற்புதமான மனநிறைவு.

 எங்கள் கிராமத்து பெண்கள்;  தன்னை விட சிறியவர்கள் என்றாலும், எங்களை இன்னார் வீட்டு தம்பி என்று உறவுகளை மட்டுமே சொல்லி அழைப்பர்.
கள்ளம் கபடம் இல்லாத அவர்களின் விசாரிப்பு எந்த வார்த்தைகளையும் கொண்டு  விவரிக்க முடியாதது .
எங்களின் சில  குடும்பங்களில் பகை இருந்தாலும் இப்பொழுது உள்ள தலைமுறைகள் மிக ஒற்றுமையாய் தான்   இருக்கிறார்கள் .
எங்கள் முன்னோர்களும்  எங்களின் ஒற்றுமையை பார்த்து அவர்களும் பகையை மறப்பார்கள் என நம்புகிறோம்.


No comments:

Post a Comment